உள்ளுர் சந்தையில் கோழி இறைச்சியின் விலைகள் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட வேண்டுமென அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க டொலரின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் பல பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்ட போதிலும், கோழி இறைச்சியின் விலை உயர்வாகவே காணப்படுவதாகவும் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் விலையை குறைக்க விரும்பவில்லை என்றால், அடுத்த வாரம் முதல் கோழி இறைச்சியை புறக்கணிக்க அழைப்பு விடுக்கப்படும் என்றார்.
உற்பத்தியாளர்களும் வர்த்தகர்களும் கணிசமான இலாபம் ஈட்டுகின்ற அதேவேளை மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும் அசேல சம்பத் வலியுறுத்தியுள்ளார்.
அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியாமல் பொதுமக்கள் சிரமப்படும் நிலையில், இதுபோன்ற உயர் விலையை பராமரிப்பது நியாயமற்றது .
அதன்படி பிஸ்கட் மற்றும் தின்பண்டங்களின் விலைகள் அதிவேகமாக அதிகரிக்கப்பட்ட போது இதேபோன்ற வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவும் அசேல சம்பத் மேலும் தெரிவித்தார்.
Discussion about this post