கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையில் மந்தபோசணை 2 வீதத்தால் அதிகரித்துள்ளது என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல நேற்று தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, பட்டினியால் வாடும் நிலைமையை இல்லாதொழித்தல், கர்ப்பிணித் தாய்மாருக்கான சத்துணவு, மந்தபோசாக்கு இல்லாத நிலைமையை உருவாக்குதல் ஆகியவற்றுக்கே சுகாதார அமைச்சராக நான் முன்னுரிமை அளிப்பேன். அதுவே மிக முக்கியம்.
மந்தபோசாக்கு என்பது 12 வீதமாகவே இருந்த நிலையில் அது தற்போது 14 வீதமாகியுள்ளது. அதாவது 2 வீத அதிகரிப்பு இடம்பெற்றுள்ளது. அதனை 10 வீதமாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.
Discussion about this post