நீர் கட்டணத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துளோம் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (09.06.2023) விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், தற்போதைய நீர் கட்டண அறவீடுகளின்படி ஒவ்வொரு மாதமும் 425 மில்லியன் ரூபா நட்டத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இந்தளவு பாரிய நிதி இருக்குமானால் பல்வேறு கஷ்டங்களுக்கு உள்ளாகியிருக்கும் மலையக மக்களின் தேவைகளை பெற்றுக்கொடுக்க அதனை உபயோகப்படுத்த முடியும்.
இதேவேளை நீர் கட்டணம் அதிகரிக்கும்போது, சமுர்த்தி பயனாளிகள் மற்றும் அரசாங்கத்தின் நலன் புரி திட்டங்களுக்கு உட்பட்டோருக்கு நீர் கட்டணங்களை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது.
நீர் பாவனையாளர்களில் 20 சதவீதமானவர்களே இந்த நீர் கட்டண அதிகரிப்புக்குள் உள்வாங்குவார்கள். அத்துடன் நீர் கட்டணம் அதிகரிப்பது தொடர்பில் நாங்கள் கடந்த 3மாதங்களாக ஆராய்ந்து வருகின்றோம்.” என தெரிவித்துள்ளார்.
Discussion about this post