அடுத்த வருடம் (2024) ஜனவரி மாதம் அதிபர் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாட்டை அரசாங்கம் செய்து வருவதாக அரச உயர் மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்காகத்தான் உள்ளூராட்சி சபைத் தேர்தலை அரசாங்கம் ஒத்தி வைப்பதற்கு தயாராகின்றது என்றும் அந்தத் தகவல்கள் கூறுகின்றன.
இது தொடர்பில் ஓரிரு மாதங்களுக்கு முன்பு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான அதிபர் ரணில் விக்ரமசிங்கவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரான வஜிர அபேவர்தனவும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவை அழைத்து பேசியிருக்கின்றனர்.
அதிபர் ரணில் விக்ரமசிங்கவை பொது வேட்பாளராக நிறுத்துவதற்கு அவர்கள் இருவரும் மொட்டுக் கட்சியின் ஆதரவை பசிலிடம் கோரி இருந்தனர்.
மொட்டு – ஐ.தே.க வாக்குகளையும் வடக்கு – கிழக்கில் உள்ள தமிழ் முஸ்லிம் வாக்குகளையும் மலையக மக்களின் வாக்குகளையும் வைத்து வெற்றி பெறலாம் என்று வஜிர அப்போது பசிலிடம் கூறியிருக்கிறார்.
இதேவேளை, ரணில் விக்ரமசிங்கவை பொது வேட்பாளராக நிறுத்துவதற்கு பசிலும் பச்சைக் கொடி காட்டி இருந்தார் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
Discussion about this post