எரிபொருள் மற்றும் எரிவாயுவைப் பெறுவது தொடர்பில் அடுத்த மூன்று வாரங்கள் நாட்டுக்கு கடினமான காலமாக இருக்கும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆறு மாதங்களுக்கு நாட்டின் நாளாந்த நடவடிக்கைகளுக்கு சுமார் 5 பில்லியன் டொலர் தேவைப்படுவதுடன், வெளிநாட்டுக் கையிருப்புகளை பராமரிக்க மேலும் ஒரு பில்லியன் டொலர் தேவை என இன்று நாடாளுமன்றத்தில் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இந்த உதவியை வெளிநாட்டில் இருந்து பெற வேண்டும் என்று தெரிவித்துள்ள பிரதமர் அடுத்த மூன்று வாரங்கள் நாட்டுக்கு கடினமான காலமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
Discussion about this post