Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

அடுத்த அரகலய இரத்த வெள்ளமாக தான் இருக்கும்! சந்திரிக்கா விடுத்த எச்சரிக்கை

September 9, 2023
in இலங்கை, முக்கியச் செய்திகள்
அடுத்த அரகலய இரத்த வெள்ளமாக தான் இருக்கும்! சந்திரிக்கா விடுத்த எச்சரிக்கை
0
SHARES
Share on FacebookShare on Twitter

நாட்டில் அடுத்த அரகலய நிம்மதியாக இருக்காது. அது இரத்த வெள்ளமாக தான் இருக்கும். மக்களின் கோபத்தைக் குறைத்து மதிப்பிடாதீர்கள்.” என அரசாங்கத்திற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க எச்சரிக்கை விடுத்தார்.

சிங்களத் தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலிலேயே சந்திரிக்கா இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

“ஜனாதிபதி ரணிலின் சப்பாத்தாக நான் இருந்திருந்தால்கூட பொதுத் தேர்தலுக்கு உத்தரவிட்டிருப்பேன். தோல்விப் பயம் காரணமாக ரணில் விக்கிரமசிங்க தேர்தலுக்குச் செல்லவில்லை.

நாட்டின் வீழ்ச்சியை ரணில் விக்கிரமசிங்கவால் விரைவாகத் தடுத்து நிறுத்த முடிந்தது. ஆனால், ஊழல் அரசியல்வாதிகளுடன் இணைந்து பணியாற்றியதால் அவரால் முன்னேற முடியவில்லை.

ஊழல் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே அரசில் உள்ளார்கள். ரணில் திருடுகின்றார் என்று நான் நினைக்கவில்லை. ஆனால், அவரைச் சுற்றியுள்ள அனைவரும் திருடுகின்றார்கள்.

உதாரணத்துக்குச் சுகாதார அமைச்சரைப் பாருங்கள். அவரின் அமைச்சில் ஊழல், மோசடி இடம்பெற்றுள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற மருந்துகளால் மக்கள் இறந்துள்ளார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெலவை உடனடியாகக் கைது செய்ய வேண்டும். அவரை அமைச்சுப் பதவியில் இருந்து மட்டுமல்லாமல் நாடாளுமன்றத்திலிருந்தும் அகற்ற வேண்டும். அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் வலுவான பிரேரணைகளைக் கொண்டு வர வேண்டும்.

ஊழல், மோசடியே நாட்டைப் பின்னுக்குத் தள்ளும். இவ்வாறான ஊழல், மோசடி வஞ்சகர்கள் அதிகாரத்தில் உள்ளார்கள். மக்கள் கோபமாக இருக்கின்றார்கள். கோட்டாபயவின் விலகலுக்குப் பின்னர் அவர்கள் எதிர்பார்த்தது நிறைவேறவில்லை. அடுத்த அரகலய நிம்மதியாக இருக்காது. அது இரத்த வெள்ளமாக இருக்கும். மக்களின் கோபத்தைக் குறைத்து மதிப்பிடாதீர்கள்.” – என்றார்.

Tags: #Protest#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

கனடாவின் இந்தப் பகுதியல் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு!

Next Post

வீட்டின் சமையலறையில் குழி தோண்டி சடலங்களை புதைத்த கொடூர நபர்!

Next Post
வீட்டின் சமையலறையில் குழி தோண்டி சடலங்களை புதைத்த கொடூர நபர்!

வீட்டின் சமையலறையில் குழி தோண்டி சடலங்களை புதைத்த கொடூர நபர்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.