2023ஆம் ஆண்டு தொடக்கத்தில் 8 ஆயிரம் ஆசிரியர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது-
இது தொடர்பான தேர்வுகள் ஏற்கனவே ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் நடைபெற்று வருகின்றன. ஆசிரியர்களாக விரும்புகின்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டு அதற்கேற்ப திறமைப் பரீட்சையின் பின்னர் மாகாண அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்யப்படுவர்.
அத்தகைய ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குள் தேசிய கல்வி நிறுவனத்தால் நடத்தப்படும் கற்பித்தல் முறைகளில் டிப்ளமோவை முடிக்க வேண்டும்.
ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் 8 ஆயிரம் பரீட்சார்த்திகளுக்கான பரீட்சைகளை நடத்தவுள்ளோம். அடுத்தாண்டு தொடக்கத்தில் அவர்களுக்கு நியமனங்களை வழங்க முடியும். அ அதன்பின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான வயது வரம்பு இன்றி அகில இலங்கை ரீதியில் பரீட்சை நடத்தவுள்ளோம். மதிப்பெண்களைப் பொறுத்து, நேர்முகத் தேர்வின் மூலம் அவர்கள் மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள்.
பயிற்சிக் கல்லூரிகளை பல்கலைக் கழகங்களாக தரம் உயர்த்த கோரிக்கை எழுந்துள்ளது. இந்தக் கோரிக்கை தொடர்பான ஆரம்ப நிலை கலைந்துரையாடல்களை முடித்துவிட்டோம். முன்மொழிவு வரைவு மற்றும் அமைச்சரவைப் பத்திரம் தயாரிப்பதற்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
ஆசிரியர் கல்விக்கான பல்கலைக் கழகம் அமைப்பதே எங்கள் திட்டம். அதற்காக 19 பயிற்சிக் கல்லூரிகளையும் ஒருங்கிணைக்கலாம். அதன் ஸ்தாபனத்துடன் அதிகமான பாடங்களை உள்ளடக்குவதற்கு இது எங்களுக்கு உதவும்.
ஒரு வருட பயிற்சியின் போது இளங்கலை பட்டதாரிகள் மூன்று வருட தத்துவார்த்த வெளிப்பாட்டைப் பெறுவார்கள். எனவே 4 வருடங்களின் பின்னர் எமக்கு நன்கு பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியர் ஒருவர் கிடைப்பார். பல்கலைக்கழக மானியக் குழுவினால் வழங்கப்பட்ட அளவு கோல்களின்படி விரிவுரையாளர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள்.- என்றார்.
Discussion about this post