ஆர்ப்பாட்டக்காரர்களால் சூழப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துக்கோரள தற்கொலை செய்து கொண்டார் என்று முன்னர் கூறப்பட்டிருந்த நிலையில், அவர் அடித்துக் கொல்லப்பட்டமை உடற்கூற்றுப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
அவரும், அவரது மெய்ப்பாதுகாவலரும் உயிரிழந்தமைக்கு தாக்குதல்களே காரணம் என்று அத்தனகல வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி அறிக்கையிட்டுள்ளார்.
மஹிந்த ஆதரவாளர்கள் காலிமுகத் திடலில் மேற்கொண்ட வன்முறையை அடுத்து, நாடு முழுவதும் அரசாங்கத்துக்கு எதிரான வன்முறைகள் கடந்த 9ஆம் திகதி பரவியிருந்தது.
அன்று மாலை பொலனறுவை சென்று கொண்டிருந்தபோது ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் சிக்கிக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மெய்ப்பாதுகாவலரும் அருகில் உள்ள ஆடையகம் ஒன்றுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தனர்.
Discussion about this post