பரீட்சை வினாத்தாள் அச்சிடுவதற்குரிய தாள்களுக்கான தட்டுப்பாடு காரணமாக மேல் மாகாணத்தில் பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
தரம் 6, 7 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கான தவணைப் பரீடசைகள் மற்றும் தரம் 9, 10 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கான பரீட்சைகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
இறக்குமதிக்கான டொலர் பற்றாக்குறை காரணமாக காகித இறக்குமதியும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் நாட்டில் காகிதாதிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
Discussion about this post