ஓகஸ்ட் மாதத்தில் தென்னாப்பிரிக்காவில் BRICS (பிரிஸ்) மாநாடு நடைபெற உள்ள நிலையில், அந்த மாநாட்டில் பங்கேற்பதற்காகச் சென்றால், தான் கைது செய்யப்படலாம் என புடின் அஞ்சுவதாக கூறப்படுகிறது.
சமீபத்தில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், உக்ரைனில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களுக்காக புடினைக் கைது
செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஒப்பந்தத்தின் கீழிருக்கும் ஏதாவது ஒரு நாட்டில் கால் வைத்தால், அவரை அந்த நாடு கைது செய்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் ஒப்படைக்கவேண்டும். இந்நிலையில், சர்வதேச
குற்றவியல் நீதிமன்றத்தின் ஒப்பந்தத்தின் கீழிருக்கும் தென்னாப்பிரிக்காவில் BRICS மாநாடு நடைபெற உள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் நல்ல உறவு இருந்தாலும், தென்னாப்பிரிக்கா, கைது உத்தரவை தொடர்ந்து மாநாட்டுக்காக வரும் புடினைக் கைது செய்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் ஒப்படைக்கவேண்டும்.
புடின் இந்த மாநாட்டில் கலந்துகொள்வாரா என்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த கிரெம்ளின் செய்தித்தொடர்பாளர், அது தொடர்பான முடிவுகள் மாநாடு தொடங்குவதற்கு முன் எடுக்கப்படும் என்றார்.
The BRICS என்பது, பிரேசில், ரஷ்யா, இந்தியா சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் அடங்கிய ஒரு வளர்ந்துவரும் வலிமையான வர்த்தக கூட்டமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post