இலங்கை சிறைச்சாலையில் உள்ள தமிழக மீனவர்கள் 56 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை
எடுக்க வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர்
ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார்.
இதுசம்மந்தமாக முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கைச் சிறைகளிலிருந்து
தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை
எடுத்தமைக்காக மத்திய அரசுக்கு தனது நன்றியைத் கூறிக்கொண்டதுடன்
சென்ற 2021 டிசம்பர் 19 மற்றும் 20 ஆம் நாளிலிருந்து இலங்கை
சிறைகளில் வாடிக் கொண்டிருக்கும் 56 மீனவர்களை விடுவித்து, பாதுகாப்பாக
இந்தியாவுக்கு வரவழைக்க கடும் முயற்சிகள் செய்யப்பட வேண்டுமென்றும்
கோரியுள்ளார்.
Discussion about this post