தொழில் நிமித்தம் அல்லது வேறு எந்த நோக்கத்துக்காகவும் வெளிநாடு செல்ல விரும்பும் அரச உத்தியோகத்தர்களுக்கு ஐந்தாண்டு கால சம்பளமில்லாத விடுமுறை திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டியொன்றில் பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தினேஷ் குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது, அரச ஊழியர்கள் 5 வருட நிறைவில் சம்பளம் இல்லாமல் விடுமுறை காலத்தை பூர்த்தி செய்ததன் பின்னர் சகல சலுகைகளுடனும் அவர்களின் பதவியுயர்வு மற்றும் தரங்களை மீளப் பெறுவார்கள்.
இதன் மூலம் அரச ஊழியர்கள் வெளிநாட்டுக்கு வேலை வாய்ப்புக்காக செல்வதற்கு ஊக்கம் கிடைக்கும். இந்தத் திட்டம் அரச ஊழியர்களுக்கு பல நன்மைகளை வழங்கும்.- என்றார்.
Discussion about this post