மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே இலங்கை இராணுவத் தளபதியாக நேற்றுப் பதவியேற்றுக் கொண்டார்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச முன்னிலையில் அவர் பதவியேற்றுக் கொண்டுள்ளார். இராணுவத் தளபதியாகப் பதவியேற்பதன் மூலம் விக்கும் லியனகே இன்று முதல் லெப்டினன்ட் ஜெனரலாகப் பதவி உயர்வு பெறுகின்றார் என்று கூறப்படுகின்றது.
இதுவரை இராணுவத் தளபதியாகப் பதவி வகித்த ஜெனரல் சவேந்திர சில்வா பதவி விலகியதை அடுத்தே விக்கும் லியனகே இராணுவத் தளபதியாகப் பதவியேற்றுக்கொண்டுள்ளார்.
Discussion about this post