வவுனியா, ஈரற்பெரியகுளத்தில் நீராடச் சென்ற இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வவுனியா தேக்கவத்தையைச் சேர்ந்த நதீசன் விதுசரன் (வயது-14), கைலாஸ் (வயது-16) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.
தேக்கவத்தைச் சேர்ந்த நால்வர் நேற்று மாலை நீராடுவதற்காக ஈரற்பெரியகுளத்துக்குத் தங்கள் வளர்ப்பு நாயுடன் சென்றுள்ளனர்.
அவர்களில் இருவர் நீராடியபோது நீரில் மூழ்கியுள்ளனர். அவர்களைக் காப்பாற்ற முயன்ற போது, ஏனைய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர்.
நீரில் மூழ்கிய இருவர் காப்பற்றப்பட்ட நிலையில், ஏனைய இருவரைக் காப்பாற்ற முடியவில்லை. அந்தப் பகுதி மக்கள், இராணுவத்தினர், பொலிஸார் ஆகியோர் இணைந்து மேற்கொண்ட நீண்ட நேரத் தேடுதலில் இருவரின் உடல்கள் மீட்கப்பட்டன.
உயிரிழந்தவர்களின் உடல்கள் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வவுனியா பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Discussion about this post