இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை நிலையான வைப்பு வட்டி வீதம் மற்றும் நிலையான கடன் வட்டி வீதத்தை அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி நந்தலால் வீரசேகர பதவியேற்ற பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நிலையான வைப்பு வட்டி வீதம் 13.5 வீதமாகவும் ஆகவும், நிலையான கடன் வட்டி வீதம் 14.5 வீதம் ஆகவும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, பொருளாதார நெருக்கடியின் அவசர நிலை தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று இரவு 10.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இதில் மத்திய வங்கியின் ஆளுநர், நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் பொருளாதார நிபுணர்கள் துமிந்த ஹுலங்கமுவ மற்றும் பேராசிரியர் எம்.திலகசிறி ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
Discussion about this post