கேகாலை, ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டம் செய்த மக்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் பிரயோகம் தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் ரோஹினி மாரசிங்கவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
நேற்று புதன்கிழமை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது.
ரம்புக்கனையில் நேற்றுமுன்தினம் ஆர்ப்பாட்டம் நடத்திய மக்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். பலர் படுகாயமடைந்தனர்.
இந்தச் சம்பவத்துக்கு அமெரிக்கத் தூதுவர் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் உடனடியாகக் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் நேற்று அவர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இது தொடர்பில் அவர் பதிவிட்டுள்ள டுவீற்றர் பதிவொன்றில், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான வன்முறையால் இழைக்கப்பட்ட அநீதி மற்றும் ரம்புக்கனை வன்முறை தொடர்பில் முழுமையான, வெளிப்படையான விசாரணையின் தேவை தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடப்பட்டது.
அமைதியான போராட்டக்காரர்கள் உட்பட அனைத்து இலங்கையர்களின் உரிமைகளையும் பாதுகாப்பும் பணியைத் தவிர வேறு எந்த விடயமும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிக்கு முக்கியமானதாக இருந்ததில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post