ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியை ஏற்க முன்னர் ஒரு கொள்கையோடும், பதவி கிடைத்த பின்னர் இன்னொரு கொள்கையும் கொண்டுள்ளார் என்று கூறிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நடத்தை வெட்ககேடாது என்றும் சாடினார்.
இன்று நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மீதான குற்றவியல் பிரேரணையை விவாதத்துக்கு எடுப்பதா என்பது தொடர்பாக நடைபெற்ற வாக்கெடுப்பின் பின்னர் உரையாற்றும்போதே ஏம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு கூறினார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை யார் பாதுகாக்கிறார்கள்?, யார் உங்களுக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கிறார்கள் என்பது நாட்டுக்குத் தோலுரித்துக் காட்டப்பட்டுள்ளது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார்.
ஜனாதிபதிக்கு எதிரான இந்த பிரேரணை தயாரிக்கப்பட்ட போது, அப்போது எதிர்க்கட்சியில் இருந்த பிரதமர் அதற்கு ஆதரவு எனப் பகிரங்கமானக் கூறியிருந்தார்.
பிரதமர் பதவிக்கு வருவதற்கு முன்பு ஒருகொள்கையோடு இருந்த ரணில் விக்கிரமசிங்க, பதவி கிடைத்த பின்னர் தனது கொள்கையை மாற்றியுள்ளார் என்றும் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டினார்.
Discussion about this post