அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து சங்கம் இன்று(20) முதல் தமது போக்குவரத்து நடவடிக்கைகளிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் நெருக்கடி நிலையினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நேற்றுமுன்தினம் (18) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, நேற்று(19) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணங்கள் 35 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், குறைந்தபட்ச கட்டணம் 27 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதனால் பாடசாலை மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை தொடரமுடியாத நிலையில் உள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று ஜனாதிபதி கோத்தாய ராஜபக்ச மற்றும் ஆட்சியிலுள்ள அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தும் போராட்டங்கள் தீவிரமாகியுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Discussion about this post