கண்டியில் மண்ணெண்ணெய்காக வரிசையில் காத்திருந்த ஒருவர் மயங்கி விழுந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். சுமார் 5 மணித்தியாலங்கள் வரையில் எரிபொருளுக்காக இவர் வரிசையில் காத்திருந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் கண்டி – உடதலவின்ன – வத்தேகம பகுதியைச் சேர்ந்த 70 வயதானவர் எனத் தெரியவருகி்ன்றது.
இதேவேளை, நேற்றுமுன்தினம் கொடவத்தையில் பெண் ஒருவர் மண்ணெண்ணெய் வாங்க நீண்ட நேரம் வரிசையில் நின்ற போது மயங்கி விழுந்தார்.
Discussion about this post