மட்டக்களப்புக்கு இன்று பயணம் செய்த சீனத் தூதுவர் குய் சென் ஹாங் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடந்த நிகழ்வுகளில் பங்கேற்றார்.
இந்த நிகழ்வின்போது தேர்ந்தெடுக்கப்பட்ட சில குடும்பங்களுக்கு சீனத் தூதுவரால் உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
மட்டடக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான பல்வேறுபட்ட விடயங்கள் இதன்போது விளக்கமளிக்கப்பட்டது.
மாவட்டத்தின் முக்கிய உற்பத்தித் துறைகளான மீன்பிடி, விவசாயம், கால்நடை வளர்ப்பு, சுற்றுலாத்துறை உள்ளிட்ட அனைத்து துறைசார் அபிவிருத்தி விடயங்கள் தொடர்பிலான திட்டங்களையும் சீனத் தூதுவரிடம் முன்வைத்துள்ளனர்.
Discussion about this post