குறைந்த விலையில் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்காக, தாய்லாந்தின் புதிய நிறுவனம் ஒன்று தெரிவு செய்யப்பட்டுள்ளது என்று லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது, கடந்த 2 ஆண்டுகளில், எரிவாயுவை இறக்குமதி செய்யும் நிறுவனம், மெட்ரிக் டன் ஒன்றுக்கு அறிவிட்ட தொகையை விடவும் 9 டொலர் குறைவாக, புதிய நிறுவனத்திடமிருந்து எரிவாயுவை பெற்றுக் கொள்ள முடியும்.
கடந்த 2 ஆண்டுகளாக, ஓமானில் இருந்து நாட்டுக்கு எரிவாயு இறக்குமதி செய்யப்பட்டது. அந்த நிறுவனத்துடனான ஒப்பந்தம் இந்த மாதத்துடன் நிறைவடைகிறது. அடுத்த மாதம் முதல் 2 ஆண்டுகளுக்கு எரிவாயுவை பெற்றுக் கொள்வதற்காக விலை மனுக் கோரப்பட்டுள்ளது.
ஓமான் நிறுவனத்துடன் ஏற்படுத்தி கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்திற்கு அமைய அந்த நிறுவனத்தால் அனுப்பப்பட்ட 3 ஆயிரத்து 500 மெட்ரிக் தொன் எரிவாயு அடங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது- என்றார்.
Discussion about this post