இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக ரணில் விக்கிரசிங்க நியமிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய அமைச்சரவைக்கான பெயர் பட்டியல் இன்று இறுதி செய்யப்படும் என்று அறியமுடிகின்றது.
பெயர் பட்டியல் இறுதி செய்யப்பட்ட பின்னர் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தீர்மானிக்கும் தினத்தில் புதிய அமைச்சரவை பதவியேற்கவுள்ளது.
தற்போது அமைச்சுகளுக்கான விடயதானங்கள், அமைச்சுகளின்கீழ்வரும் நிறுவனங்கள் மற்றும் அமைச்சுகளுக்கான செயலாளர்கள் நியமனம் தொடர்பான ஏற்பாடுகளும் இடம்பெற்றுவருகின்றன.
இதன் ஆரம்பக்கட்ட நடவடிக்கையாக பிரதமரின் செயலாளராக சமன் ஏக்கநாயக்க நேற்று நியமிக்கப்பட்டார்.
புதிய அமைச்சரவையில் 20 பேர் இடம்பெறக்கூடும் என்று தெரிகின்றது. நிதி மற்றும் நீதி அமைச்சு பதவிகள் அலி சப்ரியிடமே கையளிக்கப்படும் என்றும், சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சு முடிவடைந்த பின்னர், நிதி அமைச்சு பதவியில் மாற்றம் வரலாம் என்றும் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, புதிய பிரதமர் தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்த மாத இறுதியில் இந்தியா பயணிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Discussion about this post