புதிய அரசாங்கத்தில் மேலும் சில அமைச்சர்கள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
டக்ளஸ் தேவானந்தா கடற்றொழில் அமைச்சராகவும், பந்துல குணவர்தன வீதி மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சராகவும், கெஹேலிய ரம்புக்வெல்ல நீர் வழங்கல் அமைச்சராகவும்,
மஹிந்த அமரவீர விவசாயம் மற்றும் வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சராகவும், ரமேஷ் பத்திரன கைத்தொழில் அமைச்சர் அமைச்சராகவும்,
விதுர விக்ரமநாயக்க புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார அமைச்சராகவும், அஹமட் நசீர் சுற்றாடல் அமைச்சராகவும், ரொஷான் ரணசிங்க நீர்பாசனம் மற்றும் விளையாட்டு, இளைஞர் விவகார அமைச்சராகவும் பதவியேற்றுள்ளனர்.
Discussion about this post