மஹிந்த ராஜபக்ஷவை சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ பிரதமர் இன்று காலை
கொழும்பில் சந்தித்து பேசியுள்ளார்.
இச் சந்திப்பில் இருதரப்பு விவகாரங்கள் குறித்து பேசப்பட்டதாக
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
இவ் விடயம் தொடர்பாக ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், சீனாவில்
மருத்துவம் கற்கும் பெருமளவிலான இலங்கை மாணவர்கள் மீண்டும் சீனாவுக்கு
திரும்புவது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டதாகத் கூறியுள்ளார்.
மேலும் சுற்றுலா, முதலீடு, கொரோனா நிவாரணம் மற்றும் கொரோனா பிந்தைய
ஏற்பாடுகள் போன்ற விடயங்களும் பேசப்பட்டதாகவும் மஹிந்த ராஜபக்ஷ
அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.
Discussion about this post