இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் தலைவர் பதவியில் இருந்து ஓஷத சேனாநாயக்க விலகியுள்ளார்.
அதேவேளை, இலங்கையில் பேஸ்புக், டுவீற்றர், வட்ஸ்அப், யூடியூப் உட்பட 12 சமூக வலைத்தளங்கள் எவ்வித அறிவித்தலும் இன்றி நேற்று நள்ளிரவு முதல் அரசாங்கத்தால் முடக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய சமூக வலைத்தளங்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தொலைத் தொடர்புகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாடு பெரும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள நிலையில், ஆட்சியில் உள்ள அரசு பதவி விலக வேண்டும் என்று பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் தீவிரம் பெற்றுள்ள நிலையில், மக்கள் ஆர்ப்பாட்டங்களை அடங்குவதற்காக நாடு முழுவதும் 36 மணிநேர ஊரடங்குச் சட்டத்தை அரசாங்கம் நேற்று அறிவித்தது.
அதன்பின்னர் சமூக வலைத்தளங்களும் திடீரென முடக்கப்பட்டன.
Discussion about this post