பண்டாரநாயக்கவின் கொள்கைகளை பாதுகாத்துக்கொண்டே சுதந்திரக் கட்சி
முன்னோக்கிப் பயணிக்கும் என அக்கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர்
மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் 62
ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு கருத்து தெரிவிக்கும்போது அவர் இவ்வாறு
கூறினார்.
எனவே, பண்டாரநாயக்கவின் வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுப்போம்
என்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்காலம் என்பது இந்த நாட்டின்
எதிர்காலம் என்றும் மைத்ரிபால சிறிசேன கூறினார்.
மேலும் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திற்கு
முழுமையான ஒத்துழைப்பை வழங்கிச் செயற்பட்டு வருவதாகவும் அவர்
குறிப்பிட்டார்.
Discussion about this post