வாரியபொல குருணவ பிரதேசத்தில் உள்ள வாவியில் நேற்று மாலை நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் 43 மற்றும் 34 வயதுடையவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
உயிரழந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு வாரியபொல மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும், இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
Discussion about this post