நாளையும் (07) நாட்டில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
E மற்றும் F ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதிக்குள் சுழற்சி முறையில் 5 மணித்தியாலங்களுக்கும், மாலை 6 மணி முதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதிக்குள் இரண்டரை மணித்தியாலங்களுக்கும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதிக்குள் 2 மணித்தியாலங்களுக்கும், மாலை 5 மணிமுதல் இரவு 9 மணிவரையான காலப்பகுதிக்குள் ஒரு மணித்தியாலத்துக்கும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
அதேவேளை, 6ஆம் திகதிக்குப் பின்னர் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படாது என்று அரசாங்கம் சில நாள்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தது. புதிதாக பதவியேற்றுள்ள எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே, மின் விநியோகத்துக்கான எரிபொருள் தொடர்ச்சியாக இனி வழங்கப்படும் என்று கூறியிருந்தார்.
Discussion about this post