நாட்டின் தற்போதைய நிலைமைக்குக் காரணமானவர்கள் பதவி விலகிச் செல்வதே சிறந்தது என்று இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் தெரிவித்தது.
இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் உள்ளதாவது, இன்று நடைபெறவுள்ள பணிப் புறக்கணிப்புப் போராட்டத்துக்கும், எதிர்வரும் 6ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ள ஹர்த்தாலுக்கும் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவைத் தெரிவித்துள்ளது.
நாட்டின் இன்றைய நிலைமைக்குக் காரணமானவர்கள் பதவி விலக வேண்டும் என்பதே நாட்டிலுள்ள பெரும்பான்மையானோரின் கோரிக்கை. அந்தக் கோரிக்கையை ஏற்று அரசாங்கம் பதவி விலக வேண்டும்.
இதை வலியுறுத்தி இன்று பணிப் புறக்கணிப்பில் ஈடுபட நாட்டில் உள்ள அனைத்துத் தொழிற்சங்கங்களும் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன.
இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கமும் இந்த அழைப்பை விடுக்கின்றது. எதிர்வரும் 6ஆம் திகதி நடத்தப்படவிருக்கும் பொது ஹர்த்தாலுக்கும் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
இந்த இரண்டு நாள்களும் அதிபர்கள், ஆசிரியர்கள் கடமைக்குச் செல்லாது அதிபர்கள் கல்வித் திணைக்களத்துக்கும், ஆசியர்கள் அதிபர்களுக்கும் தமது விடுமுறையை அறிவிக்குமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
இனி வரும் காலங்களில் பாடசாலை மாணவர்களுக்கு தீங்கு ஏற்படாத வகையில் எமது போராட்டங்களை முன்னெடுக்க வேண்டுமென்றும் போராட்ட வடிவம் மாற்றப்பட வேண்டும் என்றும் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பிடம் வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளது.-என்றுள்ளது.
Discussion about this post