கொரோனாத் தொற்றுக் காரணமாக மரணிப்பவர்களின் உடல்களை இன்றுமுதல் முதல் அனைத்து மயானங்களிலும் அடக்கம் செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் கொரோனாத் காரணமாக உயிரிழப்போரின் உடல்களை மட்டக்களப்பு, ஓட்டமாவடியில் மாத்திரமே அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
அதேவேளை, கொரோனாத் தொற்றுக்குள்ளானவர்களில் 72 பேர் தொடர்ந்தும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதிதீவிர சிகிச்சை பிரிவில் மேலும் 81 கொரோனாத் நோயாளிகளுக்கான கட்டில்கள் மாத்திரமே காணப்படுகின்றன என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
Discussion about this post