இலங்கையில் எரிபொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் வீதிகளில் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
ஒருகொடவத்த பகுதி மக்கள் இன்று மண்ணெண்ணெய் கோரி நடத்திய போராட்டத்தால் பேஸ்லைன் வீதியில் போக்குவரத்துத் தடைப்பட்டுள்ளது. அதேநேரம் கேகாலையில் சமையல் எரிவாயு வழங்கக் கோரிக் மக்கள் வீதிகளை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எரிபொருள் வாங்குவதற்காக வரிசையில் நின்ற ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். எரிபொருள் வரிசையில் நின்ற இருவர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்திருந்த நிலையில், நேற்று எரிபொருள் வரிசையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்திருந்தார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் அனைத்துப் பொருள்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மக்கள் போராட்டங்களில் ஈடுபட ஆரம்பித்திருக்கிறார்கள்.
Discussion about this post