நாட்டில் இதுவரை 72 லட்சத்து 47 ஆயிரம் பேருக்கு கொவிட் தடுப்பூசி
ஏற்றப்பட்டுள்ளது. அவற்றில் 44 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு சைனோபாம்
தடுப்பூசியின் முதலாவது தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. அதன் இரண்டாவது
தடுப்பூசி 12 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் முதலாவது தடுப்பூசி ஒரு லட்சத்து 57 ஆயிரம்
பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. பைஸர் தடுப்பூசியின் முதலாவது மாத்திரை 47
ஆயிரம் பேருக்கு ஏற்றப்பட்டுள்ளது. கொவிஷீல்ட் தடுப்பூசி ஒரு லட்சத்து 13
ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் மொடர்னா
தடுப்பூசியும் மக்களுக்கு ஏற்றப்படவுள்ளது.
தெற்காசியாவில் விரைவில் தடுப்பூசியை வழங்கும் நாடுகளில் பட்டியலில்
இலங்கை முன்னிலையில் உள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
Discussion about this post