கிழக்கு உக்ரைனில் ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. நேற்று கிழக்கு உக்ரைன் நகா் ஒன்றில் ரஷ்யா நடத்திய ரொக்கெட் குண்டு தாக்குதலில் 21 போ் உயிரிழந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்தத் தாக்குதலில் பாடசாலை, சமுதாயக் கூடம் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த நாட்டின் காா்கிவ் நகருக்கு அருகே உள்ள மெரேஃபாவில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொதுமக்கள் தங்கியிருந்த பாடசாலை, சமுதாயக் கூடம் ஆகியவற்றின் மீது ரஷ்யப் படையினா் அதிகாலை ரொக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் 21 போ் உயிரிழந்தனா்; 25 போ் காயமடைந்தனா். காயமடைந்தவா்களில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, உக்ரைனின் துறைமுக நகரான மரியுபோலில் பொதுமக்கள் தஞ்சமடைந்திருந்த 3 அடுக்கு திரையரங்கில் ரஷ்யா வான்வழித் தாக்குதல் நடத்தியது என்று அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனா்.
எனினும், இந்தத் தாக்குதலில் அந்த திரையரங்கம் தரைமட்டமானாலும், நூற்றுக்கணக்கானவா்கள் பதுங்கியுள்ள சுரங்க அறையில் பலா் உயிா் பிழைத்திருப்பதற்கான வாய்ப்புள்ளது என்று அதிகரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.
Discussion about this post