மழை பெய்தால் மட்டுமே மின்வெட்டைத் தடுக்க முடியும். அவ்வாறு இல்லையென்றால் மார்ச் மாதம் முதல் தினசரி 10 மணி நேர மின்வெட்டுக்குச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்படும் என்று இலங்கை மின்சார சபையை மேற்கோள்காட்டித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்றுமுன்தினம் முதல் நாட்டில் 5 மணி நேர மின்வெட்டை நடைமுறைப்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
தற்போதைய டொலர் நெருக்கடி காரணமாக எரிபொருள் இறக்குமதியில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் மற்றும், உக்ரைன் – ரஷ்யா இடையிலான மோதல் என்பவற்றால் எதிர்வரும் நாள்களில் கடும் எரிபொருள் நெருக்கடி ஏற்படும் என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.
போதிய எரிபொருள் இன்மையால் அனல் மின் நிலையங்கள் பல செயலிழந்துள்ளன. இந்தநிலையில் நீர் மின் உற்பத்திக்குப் போதிய நீர் சேமிப்பு இல்லாததால் இலங்கை கடும் மின்சார நெருக்கடியை எதிர்கொள்ளவுள்ளது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Discussion about this post