தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் துறையில் பிரதான மொழி
பெயர்ப்பாளராக கடமையாற்றிய ஜோர்ஜ் மாஸ்டர் அல்லது தம்பி அப்பா
என்றழைக்கப்பட்ட வேலுப்பிள்ளை குமார் பஞ்சரட்ணம் நேற்று காலமானார்.
ஆரம்பத்தில் தபாலதிபராக பணியாற்றிய நிலையில், பின்னர் 1994 ஆம் ஆண்டு
காலப் பகுதி தொடக்கம் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல்
துறையினருடன் இணைந்து மொழிபெயர்ப்புத் துறையில் செயற்பட்டு வந்தார்.
இலங்கை அரசாங்கத்துடன் சர்வதேச நாடுகள் முன்னிலையில் நடைபெற்ற
பேச்சுக்களின் போது பிரதான மொழி பெயர்ப்பாளராகவும் ஜோர்ஜ் மாஸ்டர்
செயற்பட்டிருக்கின்றார்.
ஜோர்ஜ் மாஸ்டர், 2009 ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற இறுதிப்போரின் போது
இராணுவத்தினரிடம் சரணடைந்திருந்த நிலையில் 2016 ஆம் ஆண்டு 07 ஆம் மாதம்
04 ஆம் திகதி அவருக்கு எதிரான அனைத்து வழக்குகளிலிருந்தும் கொழும்பு
பிரதான நீதிமன்றம் அவரை விடுதலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post