கிளிநொச்சியில் கடந்த மூன்று நாள்களாக டீசல் பெறுவதற்காகக் காத்திருந்தவர்கள் நேற்று பொறுமை இழந்து வீதியை மறித்துப் போராட்டம் நடத்தியதால் அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டது.
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்துக்கு அருகில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காத்திருந்த மக்களே போராட்டத்தை மேற்கொண்டனர். சம்பவ இடத்துக்குச் சென்று பொலிஸார் நிலைமையைக் கட்டுப்படுத்தி, வீதிப் போக்குவரத்தைச் சீர் செய்தனர்.
கிளிநொச்சி மேலதிக மாவட்டச் செயலரின் கவனத்துக்கு இந்த விடயம் கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, அவர் மேற்கொண்ட நடவடிக்கையின் அடிப்படையில் ஒருவருக்கு 5 ஆயிரம் ரூபாவுக்கு டீசல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.
Discussion about this post