சுயாதீன ஊடகவியலாளராக செயட்பட்டுவந்த மாற்று திறனாளி ஞானப்பிரகாசம் பிரகாஸ் என்ற சமூக அக்கறை கொண்ட இளைஞனின் உயிரிரைப் பறித்தது கோரோனோ . கொடிகாமத்தை சேர்ந்த பிரகாஸ் , சுயாதீன ஊடகவியலாளராக யாழில்.இருந்து வெளிவரும் பத்திரிகைகளுக்கு கட்டுரைகள் , செய்திகள் எழுதி வந்ததுடன் , உள்நாட்டு, வெளிநாட்டு இணையத்தளங்களுக்கும் செய்திகளையும் கட்டுரைகளையும் எழுதி வந்தார்.
அத்துடன் உடனுக்குடன் தனது முகநூலில் உள்நாட்டு , வெளிநாட்டு செய்திகளை பதிவேற்றி வந்தவர் . அந்நிலையில் தனது முகநூலில் , புதன்கிழமை மாலை 3 மணிக்கு “கடந்த ஐந்து நாட்களாக இலேசான தலைவலி இருமலுடன் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தேன். சற்று தேறிவரும் நிலையில் இன்று அன்டிஜன் சோதனையில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.குணமடைந்த பின்னர் தடையின்றி எனது பணிகள் தொடரும். அதுவரை காத்திருங்கள்” என பதிவு ஒன்றினையும் பதிவேற்றி இருந்தார்.
சமூகத்திற்கு ஆற்றல் மிகுந்த பங்களிப்பை வழங்கியமைக்காகவும் ஊடகத்துறையில் அர்ப்பணிப்புடன் செயற்படமைக்காகவும் மாமனிதர் ரவிராஜ் விருதினையும் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது .
இந்நிலையில் இன்றைய தினம் மாலை திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதை அடுத்து , வீட்டார் அவரை வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற போது , உயிரிழந்துள்ளார்.
துடியிப்புடனும் நேர்மையுடனும் ஓய்வற்று பணியாற்றிய இந்த இளம் ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாஸ் அவர்களுக்கு தமிழ் ஆராம் ஊடக குழுமம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.
Discussion about this post