இரத்தினபுரி கொலன்ன சூரியகந்த ஹிமிதிரி பிரதேசத்தின் ஊடாக சிங்கராஜ வனத்துக்குள் சென்ற பெண்ணொருவர் கடந்த 3 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளார் என்று சூரியகந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சூரியகந்த ஜீ.ஜீ.பிரிவில் வசித்து வந்த மூன்று பிள்ளைகளின் தாயான 45 வயதான பெண்ணே காணாமல் போயுள்ளார். சிங்கராஜ வனத்தில் இயற்கையாக விளைந்துள்ள ஏலக்காய்களை பறிப்பதற்காக சென்றபோதே இவர் காணாமல் போயுள்ளனர்.
இந்த பெண் தனது கணவன் மற்றும் மகனுடன் வனத்துக்குள் சென்று ஏலக்காய் பறித்துக்கொண்டு நடந்து சென்ற போது பாதை மாறி சென்றுள்ளார் என்று பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், இராணுவத்தினரின் உதவியுடன் பெண்ணைத் தேடும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.
Discussion about this post