யாழ்ப்பாணம், மண்கும்பான் சாட்டிக் கடலில் நீராடிய அரியாலையைச் சேர்ந்த ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று மதியம் நடந்துள்ளது. அரியாலையைச் சேர்ந்த 46 வயதான இ.கணேசராசா என்பவரே உயிரிழந்துள்ளார்.
கடலில் நீராடியபோது சுழியில் அகப்பட்டு இவர் நீரில் மூழ்கியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
சடலம் மீட்கப்பட்டு உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Discussion about this post