அரசாங்கம் சர்வதேச நாணயநிதியத்தின் ஆதரவை பெறுவதற்கும் அதன் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதற்கும் தீர்மானித்தால் நான் அரசாங்கத்தில் தொடர்ந்தும் நீடிக்க மாட்டேன் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணயநிதியத்தின் உதவிகளை நாடினால் அரசாங்கம் அதன் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ள அவர் இலங்கை நலன்புரி செலவுகளை குறைக்கவேண்டியிருக்கும், அரச நிறுவனங்களை தனியார் துறையினரிடம் கையளிக்கவேண்டியிருக்கும், கல்வி சுகாதாரத்திற்கான அரசசெலவீனங்களில் கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டியிருக்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் அவ்வாறான நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளும் அரசாங்கத்தில் தொடர்ந்தும் நீடிக்கும் நிலையில் நான் இல்லை என வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
Discussion about this post