தேவை ஏற்பட்டால் நாட்டில் சமூக ஊடகங்கள் தொடர்பில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களுக்கு அமைய நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சிரேஷ்ட ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
மிரிஹானவில் நேற்று முன்தினம் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் நேற்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சமூக ஊடகங்கள் ஊடாக மேலும் வன்முறையைத் தூண்டினால் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதிலளித்த சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன,
“சமூக ஊடகங்கள் மூலம் வன்முறைச் சம்பவத்தைச் செய்ய ஏதேனும் உந்துதல் அல்லது தூண்டுதலின் ஆபத்து இருந்தால்,”தற்போது உள்ள சட்டத்தின்படி செயல்பட வேண்டி ஏற்படும்.
Discussion about this post