நேற்றுமுன்தினம் இரவு திடீரென இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டன. அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நலிவடைய வைக்கும் நோக்குடன் அரசாங்கம் இந்த நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது.
பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று தொலைத் தொடர்புகள் ஆணைக்குழு தெரிவித்திருந்தது.
ஆயினும் நாட்டில் பெரும்பாலானோர் ’வி.பி .என்’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சமூக வலைத்தளங்களை அணுகினர். நாட்டின் டிஜிற்றல் தொழிநுட்பம், தொழிற்துறை அபிவிருத்தி இராசாங்க அமைச்சர் நாமல் ராஜபக்சவும், விபிஎன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சமூகவலைத்தளத்தில் இட்ட பதிவொன்றில், சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டமைக்குத் தனது கண்டனங்களைத் தெரிவித்திருந்தார்.
சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டமைக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தது.
மக்களின் கருத்துரிமைச் சுதந்திரத்தைப் பறிக்கும் செயற்பாடுகளில் இதுவும் ஒன்று அந்த ஆணைக்குழு சுட்டிக்காட்டியிருந்தது.
கடுமையான எதிர்ப்புக்களை அடுத்து, மாலை 3.30 மணியளவில் சமூக வலைத்தளங்களின் முடக்கம் நீக்கப்படும் என்று தொலைத் தொடர்புகள் ஆணைக்கு அறிவித்ததது.
Discussion about this post