” பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பங்களிப்புடன் உருவாகியுள்ள இந்த அரசையும் சீர்குலைத்து, நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டுசெல்ல நாம் தயார் இல்லை. எதிரணியில் இருந்துகொண்டு ஆதரவு வழங்கப்படும். 10 கட்சிகளின் நிலைப்பாடு இதுவோகவே உள்ளது.”
இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச அறிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
” நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு ரணில் விக்கிரமசிங்கவும் பொறுப்புக்கூறவேண்டும். அவரின் ஆட்சி காலத்தில்தான் கூடுதல் கடன்கள் பெறப்பட்டன. மேலும் பல விடயங்களும் இடம்பெற்றன. ” – எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
“எம்மை பொறுத்தவரையில் பஸில் ராஜபக்சவும், ரணில் விக்கிரசிங்கவும் ஒன்றுதான். கோட்சூட் போட்ட பஸிலாகவே ரணிலை பார்க்கின்றோம்.
எனவேதான் அரசில் இணைந்து, பதவிகளை ஏற்பதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டது. 10 கட்சிகளும் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கும்.” – எனவும் விமல் அறிவித்தார்.
Discussion about this post