கொழும்பில் உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதால் உணவு வாங்க முடியாது நுகர்வோர் சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.
நாட்டில் தற்போது நிலவும் எரிவாயுத் தட்டுப்பாட்டால் நாடு முழுவதும் உள்ள உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் பேக்கரிக்கள் படிப்படியாக மூடப்பட்டு வருகின்றன.
கொழும்பில் இதுவரை 500க்கும் மேற்பட்ட உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன என்று கூறப்படுகின்றது.
இந்தநிலையில் பொதுமக்கள் உணவு பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என்று கூறப்படுகின்றது.
உணவுக்காக நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கின்றது என்றும், திறந்திருக்கும் உணவகங்களில் போதிய உணவு கிடைப்பதில்லை என்றும் மக்கள் கூறுகின்றனர்.
அதனால் உடனடியாகத் தயாரிக்கும் நூடில்ஸ் போன்ற உணவுகளை உட்கொண்டு நாளைக் கழிக்க வேண்டியுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post