குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு விசேட கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைச்சரவை அனுமதியும் வழங்கியுள்ளது.
5 ஆயிரம் ரூபா இரு மாதங்களுக்கு வழங்கப்படவுள்ளது என்றும், சுமார் 31 லட்சம் பேருக்கு இந்தக் கொடுப்பனவு கிடைக்கும் என்றும் அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.
அதேவேளை, அத்தியாவசியப் பொருள் இறக்குமதிக்காக, இந்தியாவிடம் மேலும் ஒரு பில்லியன் டொலர் இலங்கை அரசு கடன் கோரியுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
Discussion about this post