கிளிநொச்சி மாவட்டத்திற்கான இரண்டாவது தடுப்பூசி கடந்த மாதம்
இறுதி பகுதியில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது, எனினும் மாவட்டத்திற்கான
தடுப்பூசி கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இம்மாதம் நான்காம்
திகதிக்கு பின்னர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் நான்காம்
திகதியும் இரண்டாவது தடுப்பூசி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. என
கிளிநொச்சி பிராந்திய தொற்று நோயியலாளர் மருத்துவர் நிமால் அருமைநாதன்
தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மாவட்டத்திற்கான தடுப்பூசி இன்னும்
கிடைக்கவில்லை, அது விரைவில் கிடைக்கப்பெறும் எனவே அப்போது நாம் பொது
மக்களுக்கு அறிவித்தல் வழங்குவோம் எனத் தெரிவித்த அவர்
பொது மக்கள் அதிகமான ஒன்று கூடுவதனை தவிர்க்கும் வகையில் இம்முறை பிரதேசங்கள் ரீதியாக தடுப்பூசிசெலுத்தப்படும் நிலையங்கள் உருவாக்கப்பட்டு இரண்டாவது தடுப்பூசி
செலுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்த அவர்
தடுப்பூசி கிடைத்ததும் மேற்படி விபரங்கள் அனைத்தும் பொது மக்களுக்கு
அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
Discussion about this post