2 ஆயிரத்து 500 மெட்ரிக்தொன் எரிவாயு தற்போது கப்பலில் இருந்து கெரவலப்பிடடிய லிட்ரோ எரிவாயு சேமிப்பு முனையத்துக்கு இறக்கப்பட்டு வருகின்றது என்று லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
எரிவாயு நிறுவனங்களுக்கான எரிவாயுக் கொள்கலன் கப்பல்கள் ஒரு வாரத்துக்கு முன்னரே கொழும்புத் துறைமுகத்துக்கு வந்திருந்தபோதும் நாணயக் கடிதங்கள் திறக்கப்படாமையால் எரிவாயுவை இறக்குவதில் தாமதம் ஏற்பட்டிருந்தது.
தங்கள் கையிருப்பில் இருந்த எரிவாயு முடிவடைந்துள்ளது என்றும், அதனால் எரிவாயுவைச் சந்தைக்கு விநியோகிக்க முடியாத நிலைமை காணப்படுகின்றது என்றும் எரிவாயு விநியோக நிறுவனங்களான லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் நிறுவனங்கள் தெரிவித்திருந்தன.
இந்தநிலையில் தற்போது டொலர் விடுவிக்கப்பட்டுள்ளது என்றும், கப்பலில் இருந்து எரிவாயுவை இறக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது என்றும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, நாடளாவிய ரீதியில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது.
Discussion about this post