இன்று அதிகாலை கனகராயன்குளத்தில் டிப்பர் வாகனமும் பிக்கப் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதியது. இதில் பிக்கப் வாகனத்தில் சென்ற இருவர் சம்பவஇடத்திலேயே கொல்லப்பட்டனர் . இருவர் காயமடைந்தனர்.
வவுனியாவில் இருந்து பயணித்த பிக்கப் ரக வாகனமும் வவுனியா நோக்கி பயணித்த டிப்பர் வாகனமும் வேக கட்டுப்பாட்டை இழந்தமையால் இந்த விபத்து எற்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து பொலீசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Discussion about this post