கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை ஒத்திவைப்பதற்கான எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
திட்டமிட்டவாறு எதிர்வரும் 23ஆம் திகதி பரீட்சை ஆரம்பிக்கப்படும் என்றும் சாதாரண தரப் பரீட்சை ஒத்திவைக்கப்படவுள்ளது என்று வெளியாகும் தகவல்களில் எந்த உண்மையும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கல்விப் பொதுத் தராதாரப் பரீட்சை எதிர்வரும் 23ஆம் திகதி முதல் ஜூன் மாதம் வரையில் நடைபெறவுள்ளது. அதற்கான நேர அட்டவணையும் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.
Discussion about this post