தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும்
இடையிலான சந்திப்பை முன்னெடுப்பது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர்
இரா.சம்பந்தன் இரண்டாவது கடிதத்தினை அனுப்பி ஒருவாரமாகின்றபோதும்
இன்னமும் ஜனாதிபதியிடத்திலிருந்து எவ்விதமான பதிலளிப்புக்களும்
செய்யப்படவில்லை.
கடந்த 14ஆம் திகதி சம்பந்தன் மீண்டும் ஒரு கடிதத்தினை ஜனாதிபதி
கோட்டாபயவுக்கு அனுப்பியிருந்தார். அதில் ஜனாதிபதியை சந்திப்பதற்கு
கூட்டமைப்பு தயாராக இருக்கின்றது என்ற செய்தியை தெரிவித்ததுடன்,
அரசியலமைப்பு விடயங்கள் பற்றியே பேச்சுக்கள் தாமதப்படாது முன்னெடுக்கப்பட
வேண்டும் என்பதையும் உறுதிபடக் குறிப்பிட்டிருந்தார். இதற்கே
ஜனாதிபதியிடமிருந்து எவ்வித பதில்களும் கிடைக்கப்பெறவில்லை.
Discussion about this post